ரம்மியமான அழகில் கீர்த்தி பாண்டியன்… வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,February 07 2022]

மூத்த நடிகரும் தயாரிப்பாளருமான நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்பட்டவராக இருந்து வருகிறார். இவருடைய சமீபத்திய போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.

நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் கடந்த “2019“ ஆம் ஆண்டு வெளியான “தும்பா“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்ற இவர் தொடர்ந்து தனது அப்பாவுடன் இணைந்து “அன்பிற்கினியாள்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற இந்தத் திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பேசப்பட்டது.

தற்போது “கண்ணகி“ எனும் திரைப்படத்தில் நடித்துவரும் கீர்த்தி தொடர்ந்து புதுப்புது போட்டோஷுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை வண்ணத்தில் கூலான உடையணிந்த நடிகை கீர்த்தி பாண்டியன் ரம்மியமான மலைகளுக்கு நடுவே நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.