நெல்லை மண்ணில் ஜூன் மாதத்தை வித்தியாசமாக வரவேற்ற கீர்த்தி பாண்டியன்: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளியான ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் தந்தை மகளாக அருண்பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் நடித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் இந்த ஊரடங்கு நேரத்தில் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுள்ளார் என்பதும் அங்கு அவர் விவசாயம் கற்றுக் கொண்டிருப்பதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று ஜூன் மாதம் பிறந்ததை அடுத்து ஜூன் மாதத்தை வரவேற்கும் விதமாக தனது சகோதரியுடன் செம டான்ஸ் ஆடும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. நெல்லை மண்ணில் ஜூன் மாதத்தை வரவேற்று வித்தியாசமான நடனமாடிய வீடியோவை கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்கள், லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.