திருமணத்திற்கு பின் கீர்த்தி பாண்டியனின் ரொமான்ஸ் பதிவு.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,November 08 2023]

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிகளுக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இன்று கீர்த்தி பாண்டியனின் கணவர் அசோக் செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் தனது கணவருக்கு கீர்த்தி பாண்டியன் ரொமான்ஸ் உடன் வாழ்த்து கூறிய பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் தனது பதிவில் ’எனக்கு நடந்த நிகழ்ச்சிகளில் நீங்கள் எனக்கு கிடைத்தது தான் மிகச்சிறந்த விஷயம். உங்கள் அன்பு, மகிழ்ச்சி, நம்மை சுற்றியுள்ள இயற்கையை விட சிறப்பாக வெளிப்படுகிறது.

உங்கள் அன்பான இதயத்திற்கு எனது நன்றி. நீங்கள் எல்லாவற்றையும் பெற்று வாழ வாழ்த்துக்கள், உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.