கொரோனா விடுமுறையில் வயலில் உழுத பிரபல நடிகை!

கொரோனா விடுமுறை வந்தாலும் வந்தது, தமிழ் திரை உலகில் உள்ள பிரபல நடிகர் நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் வித்தியாசமான, காமெடியான, சீரியசான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வீடியோக்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளும், ‘தும்பா’என்ற படத்தில் நடித்தவருமான கீர்த்தி பாண்டியன் தற்போது ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது சொந்த நிலத்தில் டிராக்டரால் உழுவது போன்ற காட்சிகள் உள்ளன. கொரோனா விடுமுறையில் மீண்டும் உழுவதற்கான வந்துவிட்டேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கள் நிலத்தில் உழுவது ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருவது ஆகாது என்றும் இது தங்களது சொந்த நிலம் என்றும் இது பொது இடம் கிடையாது என்றும் நாங்கள் ஊரடங்கு உத்தரவை மிகவும் மதிப்பவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது தந்தை அருண்பாண்டியனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தில் இருவரும் தந்தை மகள் கேரக்டர்களில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படம் மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘ஹெலன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

More News

நடு ரோட்டில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 'விசாரணை' பட எழுத்தாளர்!

நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' படத்தின் கதையை எழுதிய ஆட்டோ சந்திரன் என்பவர் நடுரோட்டில் பிரசவம் பார்த்தது

65 வயது வரை பணம் சம்பாதித்த பால்கனி பையன்: கமல்ஹாசனை கலாய்த்த எச்.ராஜா

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை 'பால்கனி அரசு' என விமர்சனம் செய்தார்.

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய சென்னை ஐடி ஊழியர்கள் கைது!

கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

சீனா இனி தேவையில்லை: கொரோனா பரிசோதனை கருவிகளை கண்டுபிடித்தது கேரளா

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய உதவும் ரேபிட்கிட் என்ற கருவிகளை சீனாவில் இருந்துதான் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது என்பதும்,

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 540 பாசிட்டிவ்கள்: மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.