பத்திரிகையாளர் சந்திப்பில் கதறி அழுத பிரபல நடிகரின் மகள்!

  • IndiaGlitz, [Tuesday,June 18 2019]

'கனா' நாயகன் தர்ஷன் நடித்துள்ள அடுத்த படமான 'தும்பா' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேச வந்த இந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன் உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர் பிரபல நடிகர், தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

ஹரிஷ் ராம் இயக்கத்தில் குழந்தைகளை கவரும் வகையில் கிராபிக்ஸ் புலியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் தும்பா. இந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, 'நான் நடிகையாக வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் பல கதைகளை கேட்டு ஒருசில இயக்குனர்களின் கதைகளை நிராகரித்துள்ளதாகவும், ஒருசில இயக்குனர் தன்னை நிராகரித்துள்ளதாகவும் கூறினார். தன்னை நிராகரித்ததற்கு அவர்கள் கூறிய காரணம் என்னுடைய ஒல்லியான உடலமைப்பு மற்றும் கலர் என்று கூறியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார்

ஆனால் நான் நன்றாக நடிப்பேன் என்று என் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் ஹரிஷ் ராம் என்றும், எனக்கு முழுக்க முழுக்க தன்னம்பிக்கை கொடுத்தது அவர்தான் என்றும் கூறினார். மேலும் இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் நான் ஷார்ட்ஸ் போட்டுதான் நடித்துள்ளேன். எனக்கு ஷார்ட்ஸ் செட் ஆகுமா? என்ற சந்தேகம் என்னுள் இருந்ததை நீக்கி எனக்கு மன தைரியம் கொடுத்தது இயக்குனர்தான் என்றும் அவருக்கு எனது நன்றி என்றும் கீர்த்தி பாண்டியன் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் நடித்த தர்ஷன், தீனா இருவருமே தனக்கு மிகுந்த நம்பிக்கையூட்டினார்கள் என்றும் அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.