யக்கோவ், உன்னை நினைச்சு நான் பெருமைப்படுகிறேன்: கீர்த்தி பாண்டியன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சகோதரி ரம்யா பாண்டியனை நினைத்து பெருமைப்படுவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ’ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை அடுத்து கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் ’ரம்யா பாண்டியன், உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும், வீராயி என்ற கேரக்டரில் வாழ்ந்துள்ளீர்கள் என்றும், மிகச் சிறந்த நடிப்பு மை டியர் கண்மணி என்றும் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் வாணி போஜன் இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்து உள்ளதாகவும் இந்த படத்தின் ஒவ்வொரு வசனமும் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் அரசில்மூர்த்தி அவர்கள் மிகச் சிறந்த கதையை தேர்வு செய்துள்ளார் என்றும் அவருக்கு தனது நன்றி என்றும் கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால் அந்த மாடு கேரக்டர்தான் என்றும், ஒரு மிகச்சிறந்த படத்தை தயாரித்த ராஜசேகர பாண்டியன் அண்ணாவுக்கு எனது நன்றி என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த படம் நாளை அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SO proud of you yakkov @iamramyapandian for #RaameAandalumRaavaneAandalum You have pulled off "Veerayi" with such ease and elegance! GREAT things coming your way My dear Kanmani ?? Extremely happy for you! ✨ #RARAOnPrime pic.twitter.com/j3MkZzeueo
— Keerthi Pandian (@iKeerthiPandian) September 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com