close
Choose your channels

விஜய் 60' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல்

Monday, July 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 60' படத்தின் சென்னை மற்றும் ஐதராபாத் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் வெளிநாட்டில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்து அந்த தகவலை படக்குழுவினர் மறுத்ததையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் தற்போது இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கீர்த்திசுரேஷ் இந்த படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக கல்லூரி போன்ற செட் தயாராக இருப்பதாகவும், விரைவில் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஏற்கனவே படமாக்கப்பட்ட விஜய் மற்றும் கீர்த்திசுரேஷ் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய் நடிக்கும் படத்திற்கு முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தில் சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment