நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனை இழக்கின்றதா சிஎஸ்கே?

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் இருவர் பிராவோ மற்றும் கேதார் ஜாதவ் என்பது தெரிந்ததே. குறிப்பாக கேதார் ஜாதவ் கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியே வெற்றிக்கு வித்திட்டது

இருப்பினும் இந்த போட்டியின்போது கேதார் ஜாதவ் காயமடைந்து ரிட்டயர் ஹர்ட் ஆகி பின்னர் மீண்டும் கடைசி ஓவரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேதார் ஜாதவ் காயம் முழுமையாக குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அவர் அடுத்த சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி கூறியபோது, 'கேதார் ஜாதவ் காயம் அடைந்தது அணிக்கு மிகப்பெரிய இழப்பு தான். மிடில் ஆர்டர் பேட்டிங்கில் அவருக்கு பதிலாக சரியான நபரை களமிறக்குவோம் என்று கூறியுள்ளார். ரூ.7.8 கோடிக்கு சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனன் கேதார் ஜாதவ் இழப்பு சிஎஸ்கே ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்த வில்லன் நடிகர்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்

ரஜினியின் ஆலோசனைக்கு தடை போட்ட சேப்பாக்கம் மைதான நிர்வாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நாளை சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்தபோது, தமிழகமே போராட்டக்களத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை ரத்து செய்வது நல்லது

ஜெயலலிதாவின் பதவியை குறிவைத்து காய்நகர்த்தும் சசிகலாபுஷ்பா?

நடிகையாக இருந்த ஜெயலலிதா முதன்முதலில் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கொடுத்த பதவி அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்

சிஎஸ்கே மாஸ்ஸா பண்றாங்க: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பெருமிதம்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

காவிரியும் கருப்பு உடையும்: ரஜினி இதை செய்வாரா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீவிரமான போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உள்ள ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் வீரர்களை கடத்துவோம்