கேதார் ஜாதவ் நீக்கப்பட்டும் தோல்வி: அப்ப தோல்விக்கு காரணம் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை மற்றும் கொல்கத்தா அணி மோதிய போட்டியில் கேதார் ஜாதவ்வின் ஆமை வேக ஆட்டத்தினால் தான் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து என சமூக வலைதள பயனாளர்கள் பொங்கி எழுந்தனர் என்பதும் கேதார் ஜாதவ்வுக்கு கடும் கண்டனங்களும் மீம்ஸ்களும் தெரிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. மேலும் அவரை அணியில் இருந்து தூக்கி விட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஆவேசமாக கருத்துக்கள் பகிரப்பட்டது.
இதனை பெரும்பாலானோர் ஆதரித்தாலும் ஒரு சிலர் மட்டும் கேதார் ஜாதவ் மட்டுமே அன்றைய தோல்விக்கு காரணம் அல்ல என்றும் ஒட்டுமொத்த அணியும் அன்றைய தோல்விக்கு பொறுப்பு என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக நேற்றைய பெங்களூருக்கு எதிரான போட்டியில் கேதார் ஜாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் அணியில் இணைந்தார். இருப்பினும் சென்னை அணி நேற்று 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில் 170 என்ற பெங்களூர் அணி கொடுத்த இலக்கை எட்டுவதற்காக சென்னை அணியின் வீரர்கள் யாருமே முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தோல்வி அடைந்தால் ஒரே ஒரு வீரரின் மேல் மட்டும் பழி சுமத்தாமல் அணியில் அதிரடி மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வயதானவர்களை அணியில் இருந்து தூக்கி வைத்துவிட்டு இளம் வீரர்களை களத்தில் இருக்க வேண்டும் என்பதே சென்னை அணியின் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout