'கழுகு 2' சென்சார் மற்றும் ஃபர்ஸ்ட்சிங்கிள் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,January 11 2019]

கிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'கழுகு' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'கழுகு 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான 'சகலகலாவல்லி' என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவனின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணா, பிந்துமாதவி, காளி வெங்கட், யாஷிகா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ளார்.