பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்ட விநோதம்… வைரல் வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது உண்மைதான் போல… வயது, நிறம், சமூக வேறுபாடு என எதையும் பார்க்காமல் திருமணம் செய்தால் பரவாயில்லை. இங்கு மனிதனுக்கு உரிய எந்த தன்மையும் இல்லாமல் ஒரு பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஒரு பாடிபில்டர். இத்திருமண வீடியோ இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது.
கஜகஜஸ்தானை சேர்ந்த டோலோச்சோ மார்கோ எனும் பாடிபில்டர் தன்னுடைய செக்ஸ் தேவைக்காக பயன்படுத்தி வந்த செக்ஸ் பொம்மையை காதலித்து அதைத் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார். அவர் கடந்த 8 மாதமாக அந்தப் பொம்மையுடன் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பொம்மையை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அவ்வளவு காதலா என்று கேட்டால், ஆம் என்னுடைய காதலியை நான் மனதார விரும்புகிறேன்.
அதனால் திருமணம் குறித்து பல மாதங்களாக திட்டமிட்டு வந்தேன் எனக் கூறுகிறார். மேலும் அந்த பொம்மை திருமணத்திற்கு ஏற்ற வகையில் இல்லை எனக் கூறி உண்மையான அறுவை சிகிச்சை நிபுணரை வைத்து அந்தப் பொம்மைக்கு பல மாற்று வடிவத்தையும் கொடுத்து இருக்கிறார். இதனால் அச்சு அசலாக ஒரு பொண்ணைப் போலவே அந்த பொம்மையை மாற்றி கடந்த நவம்பர் மாத இறுதியில் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த பலரும், இப்படியும் ஒரு காதல் என புது ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments