செக்ஸ் பொம்மையுடன் திருமணம்… கிறிஸ்துமஸ்க்கு முன்னாடியே இப்படி ஆகிடுச்சே… வருதத்துடன் பதிவு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த நவம்பரில் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு பாடிபில்டர், தான் பயன்படுத்தி வந்த செக்ஸ் பொம்மையை பலரது முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இச்சம்பவம் உலகம் முழுவதும் கடும் வைரலானது. இந்தத் தம்பதியினர் தங்களது முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருந்தனர். ஆனால் தனது முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாமல் போய்விட்டது எனத் தற்போது அவர் சோகத்துடன் பதிவிட்டு உள்ளார்.
காரணம் தன்னுடைய மனைவியை தெரியாமல் உடைவித்து விட்டதாகவும் அதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாமல் வருந்துவதாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். கஜகஸ்தானை சேர்ந்த யூரி டோலோச்கோ எனும் பாடி பில்டர் மார்கோ எனப்படும் செக்ஸ் பொம்மையை கடந்த நவம்பரில் திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த ஆண்டு மார்கோவை (செக்ஸ் பொம்மை) சந்தித்தாகவும் அந்த பொம்மையுடன் 8 மாதங்களாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
அதையடுத்து தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பிய யூரி, கொரோனா தொற்றுக் காரணமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததார். ஒருவழியாக கடந்த நவம்பர் மாத இறுதியில் இத்திருமணம் நடந்து முடிந்தது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கடும் வைரலானது. மேலும் யூரி தனது மனைவியுடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு இருந்தார். அந்தப் புகைப்படங்களும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியை யூரி தெரியமல் உடைத்து விட்டாதாகத் தற்போது தெரிவித்து உள்ளார். இதனால் மார்கோ தற்போது பழுது பார்க்க வேண்டி கடை ஒன்றில் இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அது மட்டுமில்லாமல் திருமணமாகி தங்களின் முதல் கிறிஸ்துமஸ் நாளை சிறப்பாக கொண்டாட காத்திருந்தபோது தனது தவறால் அது நடக்க முடியாமல் போனது என்றும் யூரி குறிப்பிட்டு உள்ளார். வேறொரு நகரத்தில் மார்கோ தற்போது இருக்கிறார். அவர் எப்போது குணமடைந்து திரும்ப வருகிறாரோ அது தான் எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும் என்றும் யூரி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com