close
Choose your channels

'யட்சன்' நடிகருடன் ஜோடி சேரும் ஆனந்தி?

Wednesday, September 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கயல்' மற்றும் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த 'சண்டிவீரன்' ஆகிய படங்களில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்ற நடிகை ஆனந்தி, ஜி.வி.பிரகாஷுடன் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. முந்தைய இரண்டு படங்களிலும் கிராமத்து கேரக்டரில் நடித்த ஆனந்தி, இந்த படத்தில் வித்தியாசமான, கலகலப்பான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசியவிருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமியின் 'டீ டைம் புரடொக்ஷன்' நிறுவனம் தயாரிக்கும் 'பண்டிகை' என்ற படத்தில் நடிக்க ஆனந்தி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக கிருஷ்ணா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கும் இந்த படம் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டார் மற்றும் த்ரில்லர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நிதின் சத்யா, கருணாஸ், பிளாக் பாண்டி மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். கிருஷ்ணா நடித்த 'யட்சன்' திரைப்படமும் ஆனந்தி நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படமும் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் இருவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment