close
Choose your channels

'கண்ணகி இல்லைன்னா கோவலன் யாரோ': கயல் ஆனந்தியின் 'மங்கை' டிரைலர்..!

Wednesday, February 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கயல் ஆனந்தி நடித்த ‘மங்கை’ என்ற திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

கயல் ஆனந்தி, ஆண் நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அந்த கார் விபத்துக்குள்ளாகி ஒரு வயதான பெண் காயம் அடைந்து விடுகிறார். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியின் சூழ்ச்சி காரணமாக கயல் ஆனந்தி கேரக்டர் டேமேஜ் செய்யப்படுகிறது.

அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், மீள முடியாத சிக்கல்கள், ஊடகங்களில் பதிவு செய்யப்படும் பொய்யான செய்திகள் ,இதனால் பாதிக்கப்படும் கயல் ஆனந்தி அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.

இந்த படத்தை குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து உள்ள நிலையில் இந்த படம் நிச்சயம் கயல் ஆனந்திக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment