பிரபல இயக்குனரின் மைத்துனரை திருமணம் செய்த கயல் ஆனந்தி!

  • IndiaGlitz, [Friday,January 08 2021]

தமிழ் நடிகை ஆனந்திக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் பிரபல இயக்குனர் ஒருவரின் மைத்துனரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

பிரபுசாலமன் இயக்கிய ’கயல்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி அதன் பின்னர் ’பரியேறும் பெருமாள்’ ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ’சண்டிவீரன்’ ’விசாரணை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழித் திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருந்த அவருக்கு நேற்று சாக்ரடீஸ் என்ற இணை இயக்குனருடன் திருமணம் நடந்தது

இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையுலகினருக்கு இந்த திருமணத்தில் கலந்து கொள்ளஅழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது

மூடர் கூடம்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் அவர்களின் மைத்துனர் தான் கயல் ஆனந்தி திருமணம் செய்த மணமகன் சாக்ரடீஸ் என்பது குறிப்பிடதக்கது. இவர் ’அலாவுதீனின் அற்புத கேமரா’ ’அக்னிசிறகுகள்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் இணை இயக்குனராக பணி புரிந்துள்ளார் என்றும் விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இணை இயக்குனர் சாக்ரடீஸ் மற்றும் கயல் ஆனந்தி திருமணத்தை அடுத்து திரையுலகினர் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

More News

யார் யாருக்கு எந்த வாக்கியம்: டாஸ்க்கின் முடிவுகள்!

பிக்பாஸ் வீட்டில் நடந்த வாக்கியம் பொருத்தம் டாஸ்கில் ஒவ்வொருவருக்கும் வந்த வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ அவர்களுடைய கட்-அவுட்டில் ஒட்ட வேண்டும்

பாலாஜிக்கு பிக்பாஸ் கொடுத்த ஸ்பெஷல் பவர் இதுதானா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த டாஸ்க்கின் இறுதிகட்டம் நடைபெறுகிறது.

பிக்பாஸ் வீட்டில் 'அணைப்பு' கொஞ்சம் ஓவர்தான்: ஒரு இசையமைப்பாளரின் பதிவு!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதோ, வருத்தத்தில் இருக்கும்போதோ அல்லது டாஸ்க்கில் வெற்றி பெற்றாலோ ஒருவரை ஒருவர் அணைத்து கொள்வது சர்வசாதாரணமாக

பாலாவை நிறைய தடவை ட்ரை பண்ணியிருக்கேன்: 'கூடிப்பிரியேல்'க்கு க்யூட் விளக்கம் தந்த கேபி!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த சுற்றில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு வாக்கியம் கொடுக்கப்பட்டு

அரசியலில் நாகரிகம் மிகவும் முக்கியம்… முகம் சுளிக்க வைக்கும் எதிர்க்கட்சி மீதான விமர்சனங்கள்!!!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான  தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.