சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் நாயகி இவரா?

  • IndiaGlitz, [Sunday,August 08 2021]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நாயகியாக கயடுலோஹர் என்பவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மராத்தி நடிகையான இவர் ஏற்கனவே கன்னடம் மற்றும் மலையாளம் படங்களில் நடித்துள்ளார் என்பதும் ’வெந்து தணிந்தது காடு ’படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து இவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதை படக்குழுவினர் இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.