பாவனா பலாத்கார விவகாரத்தில் பிரபல நடிகைக்கு தொடர்பா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ், மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார் என்பது தெரிந்ததே. இதுகுறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகர் திலீப் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் போலிசார் அவரிடம் பலமணி நேரம் விசாரணை செய்தனர். மேலும் பாவனா கடத்தலில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி அளித்த தகவலின்படி திலீப்பின் 2வது மனைவியும் பிரபல நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான கடையில் போலீசார் சோதனை நடத்தினர்.
ஒருகாலத்தில் பாவனாவும் காவ்யா மாதவனும் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் பகை இருந்ததாகவும், இந்த முன்பகை காரணமாக பாவனாவை பழிவாங்க காவ்யா மாதவன், பாவனா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் மலையாள திரையுலகில் கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது போலிஸாரின் விசாரணை முடிந்த பின்னரே தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com