ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இருப்பதாக இன்று காலை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் சற்று முன்னர் காவேரி மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்து ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் இந்த அறிக்கையை அடுத்தே ரஜினிகாந்த் உடல்நலத்துடன் உள்ளார் என்ற தகவல் தற்போது இணையதளங்களில் பரவி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com