ஏலத்துக்கு வருகிறது ரஜினி-கமல் பட தயாரிப்பு நிறுவனம்

  • IndiaGlitz, [Monday,February 12 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, முத்து, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் உள்பட ஏராளமான  வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் கவிதாலயா நிறுவனம். இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் தற்போது ஏலத்திற்கு வந்திருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வந்துள்ளது.

வங்கி ஒன்றில் பெற்ற ஒரு கோடியே 36 லட்சம் கடனை செலுத்தாததால் இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை அபிராமபுரத்தில் உள்ள கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கட்டடங்கள் மற்றும்  வீடு ஆகியவை ஏலத்துக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பல வெற்றிகளை குவித்த நிறுவனமான கவிதாலயா புரொடக்சன்ஸின் சொத்துகள் ஏலத்திற்கு வந்துள்ளது கோலிவுட் திரையுலகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

கேங்ஸ்டர் வேடத்தில் குருசோமசுந்தரம் நடித்த படம்

பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ்பீதா என்பவ்ர் 'வஞ்சகர் உலகம்' என்ற த்ரில் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அமலாபால் பாலியல் தொல்லை விவகாரத்தில் திடீர் திருப்பம்

அமலாபால் அவர்களிடம் சென்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.

ஹார்வர்டு பல்கலையில் கமல் பேசியதன் முழு தொகுப்பு

நடிகர் கமல்ஹாசன் நேற்று ஹார்வர்டு பல்கலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பேசிய உரை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பேசியதன் முழு தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ் மகள்

சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் ஆகிய இருவரும் கோலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து வரும் நிலையில் சத்யராஜின் மகள் திவ்யாவும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

மிஷ்கின் - ராம் நடித்த சவரக்கத்தி' வசூல் நிலவரம்

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் ராம் நடிப்பில் ஜி.ஆர். ஆதித்யா இயக்கத்தில் உருவான 'சவரக்கத்தி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது.