லேட்டாக வருவதாக குற்றச்சாட்டு.. தயாரிப்பாளருக்கு நக்கலாக பதிலடி கொடுத்த கவின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கவின் தற்போது தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக இருந்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் கவின் லேட்டாக படப்பிடிப்புக்கு வருவதாகவும் அப்படியே வந்தாலும் கேரவனில் நீண்ட நேரம் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு சமீபத்தில் கல்லூரியில் நடந்த விழாவில் தனது பாணியில் நக்கலாக கவின் பதில் அளித்துள்ளார்
நடிகர் கவின் தற்போது ’ஸ்டார்’ மற்றும் ’கிஸ்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் அவர் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் தமிழ் திரை உலகின் பிஸியான ஹீரோவாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த தயாரிப்பாளர் ஒருவர் ’கவின் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை என்றும், மிகவும் தாமதமாக வருகிறார் என்றும் அதுமட்டுமின்றி நீண்ட நேரம் அவர் கேரவனில் உட்கார்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு வரமாட்டார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வளர்ந்து வரும் ஹீரோ இப்படி நடந்து கொள்ளலாமா? என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட கவின் ’நான் எத்தனை மணிக்கு வருவதாக சொல்லி இருந்தார்கள்? என்று கூட்டத்தை நோக்கி கேட்க அதற்கு கூட்டத்தினர் 7 மணி என்று பதில் கூறினர். என்னிடமும் 7 மணி என்று தான் கூறினார்கள், ஆனால் நான் ஆறு மணியிலிருந்து தயாராக இருக்கிறேன், உங்கள் கல்லூரியில் இருந்து என்னை கூப்பிட வந்தவர்கள் ஆறே முக்கால் மணிக்கு தான் வந்தார்கள், அவர்களுக்கும் சேர்த்து நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த பதில் கவின் குறித்து பேட்டி அளித்த தயாரிப்பாளருக்கு நக்கலான பதிலடியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Rightu ! 😁🔥@Kavin_m_0431's sarcastic way of dealing with controversies 😂👌🏻pic.twitter.com/PRfgeXecf8
— KARTHIK DP (@dp_karthik) March 9, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com