பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றம்.. நண்பன் கவின் 'நச்' பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,November 05 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் ஆண்டனி நேற்று எதிர்பாராத வகையில் வெளியேற்றப்பட்டார். அவர் சக போட்டியாளர்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டார் என்றும் குறிப்பாக பெண் போட்டியாளர்களுக்குஅவரால் ஆபத்து என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

அர்ச்சனா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பிரதீப்புக்கு ஆதரவாக பேசிய நிலையில் மற்ற போட்டியாளர்கள் அனைவருமே பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று கூறியதை அடுத்து நேற்று பிரதீப் வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் மிகவும் அநியாயமானது என்றும் நேர்மையானது அல்ல என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதிப்பின் நெருங்கிய நண்பரும் நடிகருமான கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதீப்பின் வெளியேற்றம் குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் ’உன்னை பற்றி அறிந்தவர்கள் எப்போதும் உன்னை அறிவார்கள்’ என்று ‘நச்சென’ தெரிவித்துள்ளார்.

அதேபோல் விஜய் டிவி பிரபலம் பிரியங்காவும் தனது சமூக வலைத்தளத்தில் பிரதீப் வெளியேற்றம் குறித்து ’Not cool’ என பதிவு செய்துள்ளார்.

அதேபோல் பிரதீப் வெளியேற்றம் குறித்து பிக்பாஸ் சிசன் 1 போட்டியாளர் சினேகன் கூறியதாவது:

நீ பார்க்காத
ரணங்களும் இல்லை...
நீ பார்க்காத
வலிகளும் இல்லை...
பிரதீப்...

இதுவும் கடந்துபோகும்.

வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை....
வெளியே கிடக்கு வா...
 

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்.. சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்  ஃபைனல் போட்டியாளர்களாக வரும் தகுதி உடையவர் என்று பிரதீப் ஆண்டனி கருதப்பட்டார்.

காலையில் கைதான ரஞ்சனா நாச்சியாருக்கு கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு..!

நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்து படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பதும் இதையடுத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.

கமல்ஹாசன் மகளுக்கு பூங்கொத்து கொடுத்த பார்த்திபன்.. அடுத்த பட நாயகியா?

உலகநாயகன் கமல்ஹாசன் மகளுக்கு பூங்கொத்து கொடுத்த புகைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்துக்கு பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

இப்ப நல்லவங்கள பத்தி படம் எடுத்தா யாரும் பாக்குறதில்லை... 'ஜிகர்தண்டா 2' டிரைலர்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில்

ரஜினி படம் ரிலீஸானா ஊருக்கே டிக்கெட் எடுப்பேன்: சந்தானம் நடித்த '80's பில்டப்' டீசர்..!

சந்தானம் நடிப்பில் உருவான '80's பில்டப்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.