close
Choose your channels

கவினின் 'ஸ்டார்' படத்தில் பிரபல பாலிவுட் நடிகையா? பிரபல மலையாள நடிகருமா?

Wednesday, August 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்து வரும் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் இந்த படத்தின் மேலும் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

கவின் ஜோடியாக இந்த படத்தில் ’லவ் டுடே’ படத்தில் நடித்த இவானா மற்றும் ’பேச்சுலர்’ படத்தில் நடித்த திவ்யபாரதி நடிப்பார் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் இளன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தின் நாயகிகள் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் ஒருவர் பாலிவுட் நாயகி என்றும் இன்னொருவர் ஏற்கனவே தமிழில் பிரபலமாக இருக்கும் ஒருவர் என்றும் இரு நாயகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் கல்லூரி காதல் கதை, ரொமான்ஸ் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். சென்னை மற்றும் மும்பையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் முற்றிலும் ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment