வெறும் 10 நொடிகள் தான்... வியப்பில் இருந்து வெளி வருவதற்குள் அது நடந்துவிட்டது.. அஜித் சந்திப்பு குறித்து கவின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித்தை கவின் மற்றும் நெல்சன் சந்தித்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில், இந்த சந்திப்பு குறித்து சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் கவின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோவான கவின் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் அவருக்கு ‘மோஸ்ட் பிராமிஸிங் நடிகர்’ என்ற விருது கிடைத்தது.
இந்த விருதை பெற்றுக் கொண்ட பின், கவின் பேசியபோது, அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார். "நானும் நெல்சனும் ஒரு பக்கம் நடந்து சென்று கொண்டிருக்கையில், அதே வழியாக அஜித் சார் வந்தார். அவரை பார்க்கும் சந்தர்ப்பம் எதிர்பாராமல் அமைந்தது. நாங்கள் இருவரும் அதை எதிர்பார்க்கவில்லை. ஒரு பத்து நொடிகள் தான் சந்தித்திருப்போம். அவரை பார்த்த வியப்பில் இருந்து நான் வெளிவருவதற்குள், அவர் 'பை' என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருணமாக இது அமைந்தது," என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், இது ஒரு சாதாரண, எதிர்பாராத சந்திப்பு தான் என்றும், உடனே இதை வைத்து 'அஜித்துடன் நெல்சன் படத்தை இயக்கப் போகிறார்' என்ற வதந்திகள் பரவி வருகிறது என்பது கவின் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.
And this happened... :) #MyDearThala ♥️ pic.twitter.com/xzEita9967
— Kavin (@Kavin_m_0431) September 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com