வெறும் 10 நொடிகள் தான்... வியப்பில் இருந்து வெளி வருவதற்குள் அது நடந்துவிட்டது.. அஜித் சந்திப்பு குறித்து கவின்..!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

நடிகர் அஜித்தை கவின் மற்றும் நெல்சன் சந்தித்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில், இந்த சந்திப்பு குறித்து சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் கவின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோவான கவின் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் அவருக்கு ‘மோஸ்ட் பிராமிஸிங் நடிகர்’ என்ற விருது கிடைத்தது.

இந்த விருதை பெற்றுக் கொண்ட பின், கவின் பேசியபோது, அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார். நானும் நெல்சனும் ஒரு பக்கம் நடந்து சென்று கொண்டிருக்கையில், அதே வழியாக அஜித் சார் வந்தார். அவரை பார்க்கும் சந்தர்ப்பம் எதிர்பாராமல் அமைந்தது. நாங்கள் இருவரும் அதை எதிர்பார்க்கவில்லை. ஒரு பத்து நொடிகள் தான் சந்தித்திருப்போம். அவரை பார்த்த வியப்பில் இருந்து நான் வெளிவருவதற்குள், அவர் 'பை' என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருணமாக இது அமைந்தது, என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், இது ஒரு சாதாரண, எதிர்பாராத சந்திப்பு தான் என்றும், உடனே இதை வைத்து 'அஜித்துடன் நெல்சன் படத்தை இயக்கப் போகிறார்' என்ற வதந்திகள் பரவி வருகிறது என்பது கவின் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

 

More News

எங்க அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் கொடுங்க.. ஸ்ரீதேவி மகள் நெகிழ்ச்சி பேச்சு..!

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' என்ற படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்.. ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்தவர்..!

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா நேற்று காலமானதாக அவரது மகள் தெரிவித்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 84.

மகளை விட அம்மாவுக்கு டிரஸ் குறைச்சலா இருக்குது.. பிக்பாஸ் ஷிவானி வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்

முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவில் சந்தித்த தமிழ் நடிகர்.. குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த நிலையில், அங்கு அவரை தமிழ் நடிகர் ஒருவர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில்

'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு.. 'விடாமுயற்சி' அறிவிப்பு எப்போது?

அஜித் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும்