லாஸ்லியா உடனான காதல் குறித்து கவினின் பதிவு: ரசிகர்கள் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Sunday,March 06 2022]
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்த கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது .
இந்த நிலையில் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருவரை ஒருவர் சந்திக்ககூட இல்லை என்றும் காதல் பற்றி எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் லாஸ்லியா பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என பிஸியாக நடித்து கொண்டிருந்தத நிலையில் இன்னொரு பக்கம் கவினும் ’லிப்ட்’ உட்பட ஒரு சில படங்களில் பிசியாகி உள்ளார். மேலும் விரைவில் அவர் ’அஜித் 61’ படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது காதல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். முதலில் தான் சிங்கள் என்பதை உறுதி செய்து கொள்வதாக கூறிய கவின், அதன் பின்னர் காதல் என்பது பற்றி ஒவ்வொரு வயதிலும் ஒரு புரிதல் உள்ளது என்றும், காதல் என்பது உண்மையாக நேசிக்கக்கூடிய விஷயம் என்றும், கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான் காதல் என்றும் கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட உண்மையான காதலை நான் தேடி கொண்டிருக்கிறேன் என்றும் கண்டிப்பாக ஒருநாள் உண்மையான காதல் எனக்கும் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் கவின் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி என் வேலையையும் நான் காதலிக்கிறேன் என்றும் ஏனென்றால் அதுதான் நமக்கு கடைசிவரை சோறு போடுகிறது என்று கூறியுள்ளார்.
ஒரு உண்மையான காதலை தேடி கொண்டிருக்கிறேன் என்று கவின் கூறியதிலிருந்து லாஸ்லியா காதலை அவர் பிரேக்-அப் செய்து விட்டதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.