தல தோனி பாணியில் ரிட்டயர்மெண்டை அறிவித்த கவின்! வைரலாகும் டுவீட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ’தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் அவர் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த் நிலையில் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் போது, ‘Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired’ என்ற வாசகங்களுடன் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் என்பது தெரிந்ததே. உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதியில் இந்தியா தனது கடைசி விக்கெட்டை இழந்த நேரத்தை குறிப்பிட்டு தோனி ஓய்வு முடிவை அறிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தல தோனியின் அதே பாணியில் தனது ரிட்டையர்மென்ட் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான கவின் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள ரிட்டயர்மென்ட் அறிவிப்பில் Thanks a lot for your love and support throughout. From 20:24 hrs consider me as retired’ என்ற வரிகள் உள்ளன.
ஆனால் அதே நேரத்தில் கவின் சினிமாவிலிருந்தோ அல்லது தொலைக்காட்சியிலிருந்தோ ஓய்வு பெறவில்லை என்பதும், சமீபத்தில் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்த நிலையில் பப்ஜி விளையாட்டுக்கு தான் ஓய்வு கொடுத்து விட்டதாகவும் அவர் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவினின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
Thanks a lot for your love and support throughout.
— Kavin (@Kavin_m_0431) September 7, 2020
From 20:24 hrs consider me as retired. pic.twitter.com/YhAQyMRoyH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com