கவின் அடுத்த படத்தில் சூப்பர்ஹிட் படத்தின் நாயகி.. மிஷ்கின் செய்த உதவி..!

  • IndiaGlitz, [Friday,May 05 2023]

கவின் அடுத்த ’டாடா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இயக்குனர் இளன்’ இயக்கத்தில் கவின் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சதீஷ் என்ற இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கவின் மற்றும் சதீஷ் இணையும் படத்தின் சில அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. கவின் நடிப்பில் சதீஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ’அயோத்தி’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக இயக்குனர் மிஷ்கின் தான் பதிவு செய்து வைத்திருந்த டைட்டிலை வழங்கி உதவி செய்து உள்ளதாகவும் இந்த படத்தின் டைட்டில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.