close
Choose your channels

நெருங்கிய நண்பர் இயக்கும் படத்தில் கவின்.. இணையும் சிவகார்த்திகேயன் பட நாயகி..!

Monday, February 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’டாடா’ என்ற ஒரே திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து கவினுக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தற்போது அவருடைய நெருங்கிய நண்பர் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் ’ஸ்டார்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ‘கிஸ்’ என்ற படத்தில் கவின் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் , சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவின் நடிப்பதாக கூறப்பட்டாலும் இது குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவின் நடிக்க இருப்பதாகவும் இவர் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கவின் ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

பிரியங்கா மோகன் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ ’டான்’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது கவினுக்கும் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment