கவினுடன் நெருக்கமாக நயன்தாரா.. நன்றி அரோகரா சொன்ன இயக்குனர்.. தொடங்கியது பயணம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கவின் மற்றும் நயன்தாரா இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் ’நன்றி அரோகரா’ என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோ கவின் உடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு எடாவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்தை லலித் தயாரிப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் கவின் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மங்கலாக இருந்தாலும் ரொமான்ஸ் ஆக இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு இயக்குனர் விஷ்ணு எடாவன், ‘நன்றி அரோகரா என்று பதிவு செய்து, நயன்தாரா மேடம் அவர்களுக்கு நன்றி, கவின் அண்ணா அவர்களுக்கு நன்றி, தயாரிப்பாளர் லலித சார் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி’ என்று பதிவு செய்து ’இன்று முதல் இந்த பயணம் தொடங்குகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
கவின் மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜென் மார்ட்டின் இசையில், லியோ பிரிட்டோ ஒளிப்பதிவில், பிருந்தா நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Nandri Arohara ❤️ For my Nayanthara maam ❤️ and My Kavin Anna❤️
— Vishnu Edavan (@VishnuEdavan1) July 22, 2024
The journey Begins today ❤️
Romba romba Nandri Lalith sir🫶🏼@NayantharaU @Kavin_m_0431 @JenMartinmusic @leonbritto1 @brindagopal @7screenstudio @kavya_sriram @kabilanchelliah and many more wonderful people ❤️ pic.twitter.com/dICshe9bwg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments