வெங்கட் பிரபுவிடம் 'தளபதி 68' அப்டேட் கேட்ட பிரபல இயக்குனர்.. பதில் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்னொரு பக்கம் நடைபெற்று வருகிறது.
‘தளபதி 68 ’படம் குறித்த அப்டேட்டுகளை கேட்டு ரசிகர்கள் ஒரு பக்கம் வெங்கட் பிரபுவிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ’லியோ’ திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் ‘தளபதி 68 ’ அப்டேட் என்று வெங்கட் பிரபு உறுதிபட கூறியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் வெங்கட் பிரபுவிடம் ’தளபதி 68’ அப்டேட் எப்போது என்று கேட்டபோது அதற்கு அவர் ’விரைவில்’ என்று அவர் பதில் அளித்துள்ளார். இந்த பதிவில் கவின் நடித்துவரும் ’ஸ்டார்’ என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் இளன் ’சிங்கிள் அப்டேட் எப்போது? என்று கேட்டுள்ளார்.
’தளபதி 68’ படத்தின் மற்ற அப்டேட்களே இன்னும் வராத நிலையில் அதற்குள் சிங்கிள் அப்டேட்டா என்ற ஆச்சரியத்தில் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவுக்கு நெருங்கிய நண்பர் இளன் என்பதால் நீங்களே யுவனிடம் கேட்டு சிங்கிள் அப்டேட்டை சொல்லுங்கள் என்று ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
@vp_offl sir , first single update update update update update 😉😉
— Elan (@elann_t) September 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com