close
Choose your channels

கவின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா? வைரல் புகைப்படம்..!

Saturday, August 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கவின் விரைவில் தனது காதலி மோனிகா என்பவரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் மோனிகா, லாஸ்லியாவின் தோழி என்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’சரவணன் மீனாட்சி’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்த நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் ‘ டாடா’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த நிலையில் தற்போது அவர் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் கவின், மோனிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி இருவருக்கும் திருமணம் என்றும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் காதலர்களாக காண்பிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க கூட இல்லை என்றும் காதல் பிரேக்கப் ஆகியதாகவும் கூறப்பட்டது உண்டு.

இந்த நிலையில் கவினின் வருங்கால மனைவி மோனிகா, லாஸ்லியாவின் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து இருவரும் தோழிகளா? அல்லது போட்டோஷாப் புகைப்படமா? என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment