கவின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா? வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,August 05 2023]

நடிகர் கவின் விரைவில் தனது காதலி மோனிகா என்பவரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் மோனிகா, லாஸ்லியாவின் தோழி என்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’சரவணன் மீனாட்சி’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்த நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் ‘ டாடா’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த நிலையில் தற்போது அவர் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் கவின், மோனிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி இருவருக்கும் திருமணம் என்றும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் காதலர்களாக காண்பிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க கூட இல்லை என்றும் காதல் பிரேக்கப் ஆகியதாகவும் கூறப்பட்டது உண்டு.

இந்த நிலையில் கவினின் வருங்கால மனைவி மோனிகா, லாஸ்லியாவின் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து இருவரும் தோழிகளா? அல்லது போட்டோஷாப் புகைப்படமா? என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

'ஜெயிலர்' படத்தில் மோகன்லால் கேரக்டர் என்ன? அவரே அளித்த தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில்

'ஜெயிலர்' படத்திற்கு இலவச டிக்கெட் மற்றும் விடுமுறை.. பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு..!

மதுரையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு 'ஜெயிலர்'  படத்தின் டிக்கெட்டை இலவசமாக கொடுத்துள்ளதோடு ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை என்றும் அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

'லால்சலாம்' கொண்டாட்டத்தில் மனைவியுடன் விஷ்ணு விஷால்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் தனது காட்சியின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்தார்

'யாரெல்லாம்' இந்த காம்போ பாக்க வெயிட்டிங்.. 'ஜெயிலர்' படத்தின் மோகன்லால் ஸ்டில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இன்னும் ஐந்து நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில்

என்ன ஒரு அழகான ஓவியம்.. ஷாலினி சகோதரி ஷாம்லிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகையும் ஷாலினி அஜித்தின் சகோதரியுமான ஷாம்லி வரைந்த புதிய ஓவியம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது