close
Choose your channels

அஜித் படத்தில் கவின் இணைவது உண்மையா? படக்குழுவினர் விளக்கம்

Monday, April 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கும் ’அஜித் 61’ படத்திலும் அஜீத் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் ’அஜித் 62’ படத்திலும் கவின் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் இணையதளங்களில் கசிந்து வரும் நிலையில் இது குறித்து இரண்டு படங்களின் குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர் .

அஜித் நடிக்க உள்ள ‘அஜித் 61’ படத்தில் அஜித் பேராசிரியராக நடிப்பதாகவும் அவரது மாணவர்களில் ஒருவராக கவின் நடிக்கவிருப்பதாகவும் ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தி என்றும் ’அஜித் 61’ படத்தில் கவின் நடிக்கவில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘அஜித் 62’ படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தில் கவினுக்கு பொருத்தமான ஒரு கேரக்டர் இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்த தகவலை இப்போது உறுதி சொல்ல முடியாது என்றும் ‘அஜித் 62’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே ‘அஜித் 61’ படத்தில் கவின் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ’அஜித் 62’ படத்தில் அவர் நடிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment