நீங்கள்ல்லாம் நல்லா இருப்பிங்களாடா? கவினின் ஆவேச பதிவு

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏழு வயதுச் சிறுமியான ஜெயப்பிரியா, 3 காமக் கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு காரணமானவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என நடிகை வரலட்சுமி உட்பட ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயபிரியாவுக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது சமூக வலைத்தளத்தில் இந்த கொடூர செயலை கண்டித்து ’நீங்கள் எல்லாம் நல்லா இருப்பிங்ககளா டா’ என்று ஒரு பதிவு செய்துள்ளார்; அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல. நல்லா நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா? என்று கவின் தனது சமூக வலைத்தளத்தில் செய்து பதிவு செய்துள்ளார் கவினின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 

View this post on Instagram

#JusticeForJeyapriya

A post shared by Kavin M (@kavin.0431) on Jul 3, 2020 at 1:38am PDT