close
Choose your channels

மூன்றே நாளில் பட்ஜெட்டை விட அதிகம்.. 'ஸ்டார்' வார இறுதி வசூல் இத்தனை கோடியா?

Monday, May 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் முதல் நாளே இந்த படம் 3 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இதனை அடுத்து சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முதல் நாளை விட அதிகமாக வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் சேர்ந்து இந்த படம் மொத்தம் 15 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட் ரூ.12கோடி என்ற நிலையில் மூன்றே நாளில் பட்ஜெட்டை விட அதிக வசூல் செய்துள்ளது. இது குறித்த போஸ்டரும் படக்குழுவினராக வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கவின் நடித்த முந்தைய படமான ‘டாடா’ படத்தின் மொத்த வசூல் ரூ.20 கோடி என்ற நிலையில் ‘ஸ்டார்’ படம் மூன்றே நாட்களில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதை அடுத்து இன்னும் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் கவின் ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்து விட்டார் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது சதீஷ்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் கவின் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment