சிலந்தி வலையை அறுக்க சிங்கங்கள் வாழாது.. கவினின் 'ஸ்டார்' படத்தின் செம்ம வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கவின் நடித்து வரும் ‘ஸ்டார்’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள கவிதை செம்மையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த கவிதை பின்வருமாறு:
கன்னி வெடிகள் யாவும் என் பாதத்தை படம் பார்க்கலாம்
என் எண்ணங்கள் வெடிக்குமே என் செய்வேன் தோழனே
நூறாயிரம் பாதங்கள் எனை மிதித்து நின்றாலும்
ஓராயிரம் யானை பலம் கொண்டு உதறி எழுந்து நிற்பேனே
சிலந்தி வலையை அறுக்க சிங்கங்கள் வாழாது
சூரியனை சிறை பிடிக்க இரும்பு கதவு போதாது
அண்டத்தில் வெளியெங்கும் வளர்ந்து செல்லும் என் கனவுகளை
அனைவரும் அண்டாந்து பார்க்கின்ற நாள் நெருங்கி வரும்
வயது முதிர்ந்த போதிலும்
வழிகள் விழுந்த போதிலும்
வலிமை குறைந்த போதிலும்
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை
மேலும் கவிதையின் முடிவில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஒன்று ஒலிக்கிறது. மொத்தத்தில் இந்த வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கவின் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை இளன் இயக்கி வருகிறார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என் கனவுகள் வீழாது!
— Kavin (@Kavin_m_0431) August 31, 2023
Happy birthday Yuvan sir @thisisysr ♥️@elann_t @riseeastcre @SVCCofficial @Pentelasagar @BvsnP @Ezhil_DOP @PradeepERagav @Meevinn @sujith_karan @dancersatz @rajakrishnan_mr @muthukumaranvfx @VickyStunt_dir @venkystudios @vinoth_offl @proyuvraaj @vamsikaka… pic.twitter.com/y3d7kiFguT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments