நம்ம எல்லாரையும் பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், நாம் தான் உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: 'ஸ்டார்' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’ஒரு நடிகன் தனது நடிப்பு திறமையால் தன்னை எல்லாரையும் மறக்கடிக்க முடியும், நீ நடிக்கிற நடிப்புல பாக்குறவங்க எல்லாம் உன் மீசையை மறந்துடனும், நீ மட்டும் உன் மீசைய மறைச்சுட்டா, நீ நடிப்புல ஜெயிச்சுட்ட’ என்ற லால் பேசும் வசனத்துடன் கவின் நடித்த ’ஸ்டார்’ படத்தின் டிரைலர் ஆரம்பமாகிறது. இதை அடுத்து வரும் காட்சிகள் எல்லாம் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருப்பதால் கவினுக்கு இன்னொரு ஸ்டார் படம் நிச்சயமாகிறது என்பது இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது தருகிறது.
பள்ளி கல்லூரிகளில் சுமாராக படிக்கும் கவின், ஒரு நல்ல வேலைக்கு போக வேண்டும் என்றும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் அவனுடைய அம்மா ஆசைப்படுகிறார். ஆனால் கவினுக்கு நடிக்க வேண்டும், திரை உலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலியும் அவரை விட்டு போகும் நிலைமை ஏற்படுகிறது.
இதனை அடுத்து நடிப்பே வேண்டாம் என்று கவினை சுற்றி உள்ளவர்கள் சொல்லும் நிலையில் தனது லட்சியத்தில் சாதித்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
உனக்கு என்ன உன் மனசுல ஹீரோ என்று நினைப்பா, எதுக்கு என் ராசாவை திட்டிகிட்டே இருக்க, அவன் என் ராசா மாதிரி வருவான் ஆகிய வசனங்களும், நீ உடனே வேலைக்கு போய் எங்களுக்கு இதையெல்லாம் செய்ய சொல்லி என்று நாங்கள் சொல்லவில்லை, நீ வேலைக்கு போகாமல் நாங்கள் கஷ்டப்படுவது போல், நீ கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தான் சொல்கிறேன் என்று கவினுக்கு அவரது அம்மா அட்வைஸ் கூறும் வசனமும் நெகிழ வைக்கிறது.
‘இங்கே கற்றுக் கொள்வதற்கு கூட காசு தேவைப்படுகிறது, தகுதி தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு விட்டேன் என்று தோன்றுகிறது’ போன்ற வசனமும் ’நம்ம எல்லாரையும் ஏதோ ஒன்று பிடித்து இழுக்கத் தான் செய்யும், நாம தான் உதச்சு தள்ளிட்டு மேல வரணும்’ போன்ற வசனமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மொத்தத்தில் கவின் உடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு படமாக இந்த ’ஸ்டார்’ படம் இருக்கும் என்றும் இந்த படத்திற்கு பிறகு அவர் உண்மையிலேயே திரை உலகில் ஒரு ஸ்டாராக கவின் ஜொலிப்பார் என்றும் ரசிகர்கள் இந்த கமெண்ட்ஸ் கூறி வருகின்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com