யுவன்ஷங்கர் ராஜா குரலில் 'காலேஜ் சூப்பர் ஸ்டார்.. கவினின் 'ஸ்டார்' பாடல் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,December 12 2023]

கவின் நடித்த ‘ஸ்டார்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்து அவரே பாடியுள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். கவினின் கல்லூரி டான்ஸ் அட்டகாசமான இருக்கும் இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடல் முதல் முறை கேட்கும்போது அசத்தலாக இருக்கிறது என்று ரசிகர்களுக்கு அனுப்பி தெரிவித்து வருகின்றனர்

கவின் அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை இளன் இயக்கி உள்ளார்.