'அவ்வை சண்முகி' தோத்துவிடும் போல.. அசல் பெண்ணாக மாறிய கவின்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,April 20 2024]

கவின் நடித்து முடித்துள்ள ’ஸ்டார்’ திரைப்படம் மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலில் கவின் பெண் வேடம் போட்டுள்ள நிலையில் அவ்வை சண்முகி’ தோத்துவிடும் போல என்று கூறும் அளவுக்கு மிக இயல்பாக மேக்கப் இருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கவின் நடிப்பில், இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஸ்டார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மே 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவின் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மெலோடி’ பாடல் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் கவின் அச்சு அசலாக பெண் வேடம் போட்டு செம டான்ஸ் ஆட உள்ள காட்சிகள் உள்ளன. இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் ’அவ்வை சண்முகி’ படத்தில் கமல்ஹாசன் பெண் வேடம் போட்டதுதான் இதுவரை பெஸ்ட் என்று நினைத்திருந்தோம், அதை தோற்கடிக்கும் வகையில் இந்த மேக்கப் மற்றும் நடிப்பு உள்ளது என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கவின் ஜோடியாக அதிதி பொலங்கர் நடித்துள்ள ‘ஸ்டார்’ படத்தில் லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

More News

ஆன்மீக பயணம்: சென்னையில் உள்ள தாத்தா சாமி கோவிலின் அதிசயங்கள்

சென்னைவாசிகளுக்கு மிகவும் பிரபலமான மற்றும் பக்தர்களால் வணங்கப்படும் தலங்களில் ஒன்று, பழைய வண்ணார பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீமத் வேங்கட சுப்பானந்த ஜீவ சமாதி சித்தர் பீடம்,

'தலைவர் 171' படத்தில் இந்த பிரபல நடிகரும் இணைகிறாரா? சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம்

பகல் இரவானது.. பொருட்கள் தூக்கி வீசப்பட்டன.. துபாய் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் நடிகையின் பதிவு..!

சமீபத்தில் துபாயில் வரலாறு காணாத கனமழை பெய்ததை அடுத்து நாடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் பல குடியிருப்புகளில் தண்ணீர் புகுத்ததால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டனர் என்ற

சினிமாவுக்கு போகிறார் 'சிறகடிக்க ஆசை' நடிகர்.. திவ்யா துரைசாமி தான் ஜோடியா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீதேவாவுக்கு

தனுஷ், பிரபுதேவா இணையும் இன்னொரு 'ரவுடி பேபி.. கலக்க காத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்..!

தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் பிரபுதேவா நடன இயக்கத்தில் உருவான இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி அசத்தலாக