உன்னோட முதல் ஆட்டோகிராப் எனக்குத்தான்.. ரஜினி பிறந்த நாளில் கவின் பட புரமோஷன்.!

  • IndiaGlitz, [Saturday,December 09 2023]

கவின் நடித்துவரும் ’ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 முதல் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி முதல் கட்டமாக டிசம்பர் 12ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஸ்டார்’. இந்த படத்தில் கவின் அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் இளன் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் புரமோஷன் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோவில் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து டீசர், டிரைலர் உள்பட அனைத்து புரோமோஷன் பணிகள் குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் கவின் நடிகராக நடித்துள்ளார் என்பதும் அதனால் தான் ஸ்டார் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சற்று முன் வெளியான வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

More News

படுத்தே விட்டானய்யா... கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்த நடிகை கஸ்தூரி.. என்ன காரணம்?

சென்னை மழை, பெருவெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசனை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'முண்டாசுப்பட்டி' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்.. காளி வெங்கட் இரங்கல்..!

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் 'முண்டாசுப்பட்டி'  படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மதுரை மோகன் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து

'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!

கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான 'அவள் ஒரு தொடர்கதை' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்த நடிகை லீலாவதி காலமானார். இதனை அடுத்து அவரது மறைவுக்கு

த்ரிஷா உள்பட 3 பிரபலங்கள் மீது மான நஷ்ட வழக்கு: ரூ.1 கோடி கேட்டு மன்சூர் அலிகான் மனு..!

நடிகை த்ரிஷா உட்பட 3 பிரபலங்கள் மீது  நடிகர் மன்சூர் அலிகான் ரூபாய் ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'ஃபைட் கிளப்' படத்தின் 'யாரும் காணாத' மெலோடி பாடல்.. நெகிழ வைத்த கோவிந்த் வசந்தா..!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஃபைட் கிளப்' என்ற திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்