'காதலர் தினத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய படம் ஒத்திவைப்பா? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,January 08 2024]

கவின் நடித்த ’ஸ்டார்’ மற்றும் மணிகண்டன் நடித்த ’லவ்வர்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ’ஸ்டார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கவின் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஸ்டார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் கவின் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ’ஸ்டார்’ படம் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தில் ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பணிகள் முடிவடையாததால் இந்த படத்தின் ரிலீஸ் மார்ச் மாதத்திற்கு செல்லும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மணிகண்டனின் ’லவ்வர்’ திரைப்படம் திட்டமிட்டபடி காதலர் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் ஜோடியாக திதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.