கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம்.. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல்கள் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோவான கவின் நடிப்பில், இளன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையில் சரியான நேரத்தில் இந்த படம் வெளியாக இருப்பதால் ஓப்பனிங் வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் அதாவது 158 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வெற்றி படத்திற்கு தேவையான ரன்னிங் டைமில் இந்த படம் உருவாகியுள்ளது என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கவின் ஜோடியாக அதிதி பொலங்கர் நடித்த இந்த படத்தில் லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

'உத்தம வில்லன்' நஷ்டம் விவகாரம்.. தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' திரைப்படம் நஷ்டத்தை அளித்த நிலையில் அதற்கு பதிலாக ஒரு படம் நடித்து தருவேன் என்று கமல்ஹாசன் உறுதிமொழி அளித்ததாகவும்

லைகா நிறுவனத்தின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. முக்கிய வேடத்தில் பிரபல நடிகை..!

லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் ஒரு சூப்பர் அப்டேட்.. 'தக்லைஃப்' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கமல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது

டபுள் டிகிரி வாங்கிய 'கோட்' பட நடிகரின் மகன்.. குவியும் பாராட்டுக்கள்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தில் நடிக்கும் நடிகரின் மகன் டபுள் டிகிரி வாங்கிய தகவல் அவரது மனைவியின் சமூக வலைதள  பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

ஒரு வழியாக காதலர் இவர் தான் என ஒப்புக்கொண்டாரா பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா?

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா கடந்த சில வருடங்களாக அருண் பிரசாத் என்ற சீரியல் நடிகரை காதலித்துக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள கமெண்ட் அதனை உறுதி