கவினின் 'டாடா' படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? செம அப்டேட்!

  • IndiaGlitz, [Friday,August 26 2022]

நடிகர் கவின் நடித்த ‘டாடா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்துக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

கணேஷ் பாபு என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாடா’. இந்த படத்தில் கவின் ஜோடியாக தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் குமார், மோனிகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் விரைவில் பணிகள் தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கில் ’டாடா’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கவின் நடித்த முந்தைய திரைப்படமான ’லிப்ட்’ என்ற படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பா ரஞ்சித்தின் முதல் 'ஏ' சர்டிபிகேட் திரைப்படம்: அப்படி என்ன இருக்கும் படத்தில்?

பா ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளதை அடுத்து முதல் முறையாக 'ஏ' சான்றிதழை பெறும் பா ரஞ்சித் இயக்கிய படம் என்ற

பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதால் பரபரப்பு!

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும்

ரசிகர்கள் கலாய்த்து தள்ளினாலும் அமீர்கான் பட வசூலை முந்திய 'லைகர்'!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'லைகர்' திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில்

ஸ்பெயினின் அடுத்த நகருக்கு சென்ற விக்கி-நயன் தம்பதி: மேஜிக் லைட்ஸ்!

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தாய்லாந்து நாட்டிற்கு முதல்கட்ட தேனிலவு சென்று வந்ததை அடுத்து தற்போது இரண்டாவது

12 வயது மகனுடன் 'திருச்சிற்றம்பலம்' பாடலுக்கு செம டான்ஸ்: அஜித் பட நடிகையின் வீடியோ வைரல்!

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது 12 வயது மகனுடன் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது