close
Choose your channels

கவினின் 'டாடா' படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? செம அப்டேட்!

Friday, August 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கவின் நடித்த ‘டாடா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்துக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

கணேஷ் பாபு என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாடா’. இந்த படத்தில் கவின் ஜோடியாக தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் குமார், மோனிகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் விரைவில் பணிகள் தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கில் ’டாடா’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கவின் நடித்த முந்தைய திரைப்படமான ’லிப்ட்’ என்ற படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment