கவின் நடித்த 'டாடா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,January 23 2023]

கவின் நடித்த ‘டாடா’ திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின், அபர்ணாதாஸ், கே பாக்யராஜ், விடிவி கணேஷ், ப்ரதீப் அந்தோணி, ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘டாடா’ . இந்த படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழிலரசு ஒளிப்பதிவில் கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘டாடா’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் புரமோஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் நடித்த ‘லிப்ட்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் ‘டாடா’ படமும் அவருக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.