கவின் நடித்த 'டாடா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,January 23 2023]

கவின் நடித்த ‘டாடா’ திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின், அபர்ணாதாஸ், கே பாக்யராஜ், விடிவி கணேஷ், ப்ரதீப் அந்தோணி, ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘டாடா’ . இந்த படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழிலரசு ஒளிப்பதிவில் கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘டாடா’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் புரமோஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் நடித்த ‘லிப்ட்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் ‘டாடா’ படமும் அவருக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'வாரிசு' 11 நாட்கள் வசூல் எத்தனை கோடி? தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரங்களை அவ்வப்போது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது

22 ஆண்டுகளுக்கு முன்பே அஜித் படத்தில் கிடைத்த வாய்ப்பு.. மிஸ் செய்த மஞ்சுவாரியர்!

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் மஞ்சு வாரியார் நடித்திருந்தார் என்பதும் அஜித் உடன் முதல் முதலாக அவர் நடித்த நிலையில் இந்த படத்தின் அவரது கேரக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

4 ஆண்டு இடைவெளிக்கு பின் திரைக்கு வரும் ஷாரூக் கானின் பதான்!! தமிழக ரசிகர்கள் கொண்டாட்டம்!

பதான் படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக் கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. 

'குக் வித் கோமாளி' சீசன் 4 தொடங்கும் தேதி.., கோமாளிகள் யார் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் நம்பர் 1 'குக் வித் கோமாளி'  என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பது தெரிந்தது. 

ஒரு பொண்ணுக்காக இல்லைன்னா இந்த உலகத்தில எதுக்கு வாழணும்.. விஜய்சேதுபதியின் 'மைக்கேல்' டிரைலர்

விஜய் சேதுபதி, கௌதம் மேனன், சந்தீப் கிஷான் நடிப்பில் உருவான 'மைக்கேல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.