கவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? மீண்டும் ஒரு வெற்றி படமா?

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

கவின் நடித்த ’ஸ்டார்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான கவின் தொடர்ச்சியாக ’லிப்ட்’ ’டாடா’ ’ஸ்டார்’ ஆகிய வெற்றி படங்களை கொடுத்த நிலையில் தற்போது அவர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’பிளடி பெக்கர்’ மற்றும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கிஸ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிப்பில் உருவான ’பிளடி பெக்கர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி ’தங்கலான்’ ‘மெய்யழகன்’ உள்ளிட்ட பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு சில நாட்களுக்கு முன்பே கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவின் நடிப்பில், நெல்சன் தயாரிப்பில், சிவபாலன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.