தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த கவின் படம்.. சிவகார்த்திகேயனுடன் மோதலா?

  • IndiaGlitz, [Tuesday,September 03 2024]

கவின் நடித்த ’பிளடி பெக்கர்’ என்ற திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கவின் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதாக கூறப்படுகிறது.

கவின் நடிப்பில், நெல்சன் தயாரிப்பில், உருவாகி வரும் ‘பிளடி பெக்கர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் தீபாவளி வெளியீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் பட்டியலில் கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ படம் இணைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்ட சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அந்த படமும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் நோக்கி பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தான் கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

More News

ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் தரமான படம் வந்துருக்கு.. ரஜினிகாந்த் வாழ்த்து..!

ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் தரமான படம் வந்துருக்கு என சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், 'வாழை' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள்.. 500 பேர் சிக்குவர்.. நடிகை ரேகா நாயர்

தமிழ் சினிமாவில் பாலியல் புகாரில் 500 பேர் சிக்குவர் என்றும், தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன என்றும் நடிகை ரேகா நாயர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம் GOAT, மனம் திறக்கும் வெங்கட் பிரபு

கடந்த சில நாட்களாகவே GOAT திரைப்படம் குறித்த hype அதிகரித்துவருகிறது. சமூக வலைதளங்களில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று பேசப்பட்டு வருகிறது.

மாஸ் நடிகரின் படத்திற்காக ஒரு பாடலை பாடி கொடுத்த சிம்பு.. வேற லெவல் தகவல்..!

மாஸ் நடிகரின் படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி கொடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கூலி' படத்தில் ரஜினியின் கேரக்டர்.. 'தளபதி' படத்துடன் கனெக்சனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின்