திருமணமான ஒரே வாரத்தில் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கவின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கவின், மோனிகா என்பவரை கடந்த 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு அவரது உற்றார் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வருகை தந்தனர் என்பதை பார்த்தோம். சிவகார்த்திகேயன், நெல்சன், வெற்றிமாறன் உள்பட பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் ’டாடா’ படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இளன் இயக்கத்தில் கவின் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகிகளாக ’லவ் டுடே’ இவானா மற்றும் ’பேச்சுலர்’ திவ்ய பாரதி ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று கவின் தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் ’ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் அது உண்மையா என்பதை இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
"The universe always falls in love with a stubborn heart" - JM STORM
— Kavin (@Kavin_m_0431) August 27, 2023
Anybody who knows me personally will know how special this is for me.
Thank you yuvan sir @thisisysr 🙏🏼♥️
Thank you elan @elann_t 🤜🏼
Happy to be joining hands with @riseeastcre @SVCCofficial @Pentelasagar… pic.twitter.com/j3Syp9rusw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com