திருமணமான ஒரே வாரத்தில் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கவின்..!

  • IndiaGlitz, [Monday,August 28 2023]

நடிகர் கவின், மோனிகா என்பவரை கடந்த 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு அவரது உற்றார் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வருகை தந்தனர் என்பதை பார்த்தோம். சிவகார்த்திகேயன், நெல்சன், வெற்றிமாறன் உள்பட பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் ’டாடா’ படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இளன் இயக்கத்தில் கவின் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகிகளாக ’லவ் டுடே’ இவானா மற்றும் ’பேச்சுலர்’ திவ்ய பாரதி ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று கவின் தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் ’ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் அது உண்மையா என்பதை இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'லியோ' படத்தில் இத்தனை தீம் டிராக்குகளா? அனிருத்தை செம்மையாக வேலை வாங்கிய லோகேஷ்..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'தளபதி 68' படத்தின் கதை இதுவா? வேற லெவலில் யோசித்த வெங்கட்பிரபு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 68வது திரைப்படமான 'தளபதி 68' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

90வது பிறந்த நாளில் அசத்தலாக நடனமாடும் எம்ஜிஆர்-சிவாஜி காலத்து நடிகை..!

எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகை தனது 90 வது பிறந்தநாளில் அசத்தலாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 

அது கண்டிப்பாக தவறுதான், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. 'சந்திரமுகி 2' இசை வெளியீட்டு விழா குறித்து ராகவா லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறாரா ஓவியா? அப்ப 2 வீ டு கான்செப்ட் என்பது இதுதானா?

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில்  இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் என்று